web
analytics

«

»

Aug 19

Print this Post

Ajith Kumar’s Bike Touring Chennai To Bengaluru Photos

Actor Ajith Kumar travelled from Chennai to Bengaluru via Salem Athur yesterday with his bike.

With his 24 lakh rupees worth newly bought BMW bike, he started from Chennai at yesterday noon and reached Kattukottai via Thalaivaasal at night 9 PM.

He had his dinner in a small roadside motel at Kattukottai village. He was spotted with his bike racing gear. Fans identified him and gathered there in gangs.

Ajith wished everyone of them and took photos with them and requested them to eat there with him. At 9:30 he wore his helmet and started to Bengaluru via Salem – Chennai National Highway through Athur, Vazhappadi bypass. He was spotted with his friends and assistants.

While speaking with reporter, Ajith said that he is going to Bengaluru from Chennai to take rest.

Tamil Version

சமீபத்தில்தான் புதிதாக பிஎம்டபிள்யூ1000 ஆர்ஆர் என்ற புதிய பைக்கை ஏக விலை கொடுத்து வாங்கினார் அஜீத். தனது சொந்த உபயோகத்துக்கு அவர் வாங்கிய இந்த பைக்கை விஷ்ணுவர்தன் இயக்கும் ஆரம்பம் படத்திலும் பயன்படுத்தியுள்ளார்.

 

இந்த பைக்கில் நேற்று சென்னையை ஒரு வலம் வந்தார் அஜீத். பின்னர் முழு ரேஸ் சூட்டில் அந்த பைக்கிலேயே பெங்களூர் சென்றார். ஆத்தூர், சேலம் வழியாக அவர் பெங்களூர் சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் இருவரும் சென்றனர்.
நேற்று மதியம், சென்னையில் இருந்து, புதியதாக வாங்கிய தனது, “பி.எம்.டபள்யூ., நிறுவனத்தின், 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கில், ரேஸ் சூட்டில் இருந்ததற்காக எங்கும் இறங்காமல் செல்லவில்லை அவர். வழியில் கும்பகோணம் டிகிரி காபி என்ற கடையில் நிறுத்தி காபி குடித்தார். அவரை திடீரென்று பார்த்ததில் இளைஞர்களும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். தன்னைத் தேடி வந்து பேசிய அத்தனை பேரிடமும் ஜாலியாகப் பேசி விடைப் பெற்றுச் சென்றார் அஜீத்.
தலைவாசல் வழியாக, இரவு, 9 மணியளவில், காட்டுக்கோட்டை வந்தார். அப்போது, காட்டுக்கோட்டை சாலையோரத்தில் உள்ள, கிராமத்து ஹோட்டலில், தனது உதவியாளர்களுடன் சாப்பிட்டார். பந்தய ஆடை (ரேஸ் ட்ரஸ்) அணிந்து வந்து, கிராமத்து ஹோட்டலில் சாப்பிட்ட அவரை, ரசிகர்கள் கண்டு பிடித்து குவிந்தனர்.

பின், ரசிகர்களுடன் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டதுடன், அனைவரையும் நலம் விசாரித்ததோடு, உணவு அருந்தும்படி கூறினார். பின்னர், 9.30 மணியளவில், பைக்கில், “சென்ஸார்’ பொருத்தி, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஆத்தூர், வாழப்பாடி பைபாஸ் வழியாக, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவுக்கு, புறப்பட்டுச் சென்றார்.

காரில் உதவியாளர் , மற்றொரு பைக்கில் வந்த நண்பர், 20 நிமிட இடைவெளியில், அஜீத்குமாரை பின்தொடர்ந்து சென்றனர்.

நடிகர் அஜீத்குமார், “நிருபர்களிடம்’ கூறுகையில், “”சென்னையில் இருந்து, பெங்களூருவுக்கு ஓய்வு எடுக்க, பைக்கில் செல்கிறேன். வேறு தகவல் எதுவும் வேண்டாம்,” என்றார்.

Permanent link to this article: http://thalaajithfans.com/ajithkumar/ajith-kumars-bike-touring-chennai-to-bengaluru-photos/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get Adobe Flash player